ads

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல்

thaana serntha kootam title song teaser

thaana serntha kootam title song teaser

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் படத்திற்கான ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைப்பட  நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். மேலும் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தில் இருந்து 'சொடக்கு மேல சொடக்கு போடுது', 'நானா தானா..', 'பீலா பீலா..' போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டைட்டில் டீசர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி (நாளை) வெளியிடுவதாகவும், முழு ஆல்பம் ஜனவரி 3-ஆம் தேதி வெளியிடுவதாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து புதுவித போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

thaana serntha kootam titile song teaser albumthaana serntha kootam titile song teaser album
thaana serntha kootam titile song teaser albumthaana serntha kootam titile song teaser album

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல்