ads

சமூக வலைத்தளத்தில் வலம் வரும் போலியான தளபதி 62 டைட்டில்கள்

தளபதி 62 படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் போலியான டைட்டில்கள் பரவி வருகின்றன.

தளபதி 62 படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் போலியான டைட்டில்கள் பரவி வருகின்றன.

நாளை தளபதி விஜய் பிறந்த நாள் என்பதால் தளபதி 62 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6மணிக்கு வெளியிடுவதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. இதனால் இந்த படத்தின் டைட்டில் போஸ்டருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் தளபதி 62 படத்தின் டைட்டில் கசிந்து விட்டதாக போலியான டைட்டில்களை பரப்பி வருகின்றனர்.

துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வேற லெவல், அல்லு, ஷார்ப், கோடாரி, அருவா கலப்பை போன்ற பல தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆக்சன் கலந்த அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் அரசியல் மற்றும் தலைவன் போன்றவற்றை சார்ந்ததாக இருக்கும் என்று கணிப்புகள் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இதனால் மனதை தேர்த்தி கொண்டு ரசிகர்கள் இன்று மாலை 6 மணிக்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இது தவிர இந்த படத்தின் டைட்டில் 'வேற லெவல்' என்று பரவி வந்த நிலையில் இதனை கலாய்க்கும் விதமாக 'தமிழ் படம் 2.0' படத்தின் இயக்குனர் சிஎஸ் அமுதன் "எங்களுக்கு வெங்காயமே தேவையில்ல, காரட்ட அப்படியே சாப்பிடுவேன் ஒரே லெவல்." என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படி படத்தின் டைட்டிலுக்காக தளபதி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் மறுபுறம் அதனை கலாய்ப்பதற்கும் ஒரு கூட்டம் தயாராகி வருகிறது.

தளபதி 62 படத்தின் போலியான டைட்டில்கள் தளபதி 62 படத்தின் போலியான டைட்டில்கள்

சமூக வலைத்தளத்தில் வலம் வரும் போலியான தளபதி 62 டைட்டில்கள்