ads

தளபதி 62 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்த தளபதி 62 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதியினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்த தளபதி 62 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதியினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மெர்சல் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தளபதி 62'. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் விஜயுடன் இணைந்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் பைரவா படத்திற்கு பிறகு நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதியினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதிக்கு முன்னால் இரவு 6மணிக்கு ஜூன் 21ஆம் தேதியில் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்புக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது ஒரு வழியாக இதற்கான அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விசுவாசம் மற்றும் என்ஜிகே படங்களுடன் தீபாவளியில் மோதவுள்ள இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ஆக்சன் கலந்த அரசியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விஜய் பிறந்த நாளில் தளபதி பர்ஸ்ட் லுக் வெளியீடு விஜய் பிறந்த நாளில் தளபதி பர்ஸ்ட் லுக் வெளியீடு

தளபதி 62 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு