ads

மெர்சல் படத்தினை தொடர்ந்து தேனாண்டாள் தயாரிப்பில் அடுத்த பிரபலம்

thenandal studios next movie with dhanush

thenandal studios next movie with dhanush

'வேலையில்லா பட்டதாரி 2' படத்தினை தொடர்ந்து தனுஷ், என்னை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, தி எக்ஸார்ட்னரி ஜோர்னி ஆப் தி பாகர் போன்ற படங்களில் நடித்து வருவதோடு மாரி 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ஒரு புது பாடத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.  

தனுஷ் நடிக்கவிருக்கும் அந்த புது படத்தினை தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தேனாண்டாள் பிலிம்ஸ் தனது ட்விட்டரில் தனுஷ் பாடத்தை தயாரிக்கவிருப்பதாக பதிவு செய்துள்ளது.    

மெர்சல் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்ற ஸ்ரீ தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் அதனை தொடர்ந்து தனுசுடன் இணையவிருகிறது. தனுஷின் பெயரிட படாத இப்படத்தின் இயக்குனர், நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் என எந்த வித தகவலையும் வெளியிடப்படத்த நிலையில் இது பற்றிய தகவலை விரைவில் வெளிப்படுத்துவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. 

மெர்சல் படத்தினை தொடர்ந்து தேனாண்டாள் தயாரிப்பில் அடுத்த பிரபலம்