ads

உதயநிதி ஸ்டாலின் ரீமேக் படத்திற்கு யு சான்றிதழ்

nimir movie u certificate

nimir movie u certificate

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த 'இப்படைவெல்லும்' படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி மலையாள ரீமேக் படத்தில் நடித்துவருகிறார். இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக் தற்பொழுது உருவாகிவருகிறது. இந்த ரீமேக் படத்தில் நாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார்.முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டிகுருவில்லா தயாரிக்கும் இப்படத்தில் நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி,எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துநடித்துள்ளனர்.   

அஜனீஷ் லோக்நாத் மற்றும் தர்புக சிவா இணைத்து இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டதினை தொடர்ந்து 'நெஞ்சில் மாமழை' என்ற சிங்கிள் பாடலை இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  வெளியிட்டார். இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சில நாட்களில் வெளியிடுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டுள்ள இப்படத்திற்கு யு சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.      

உதயநிதி ஸ்டாலின் ரீமேக் படத்திற்கு யு சான்றிதழ்