ads

உள்குத்து படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ulkuthu movie new release date

ulkuthu movie new release date

இயக்குனர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் தினேஷ் ஆகியோர் கூட்டணியில் வெளியான 'திருடன் போலீஸ்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'உள்குத்து'. இந்த படத்தை கனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் தயாரிக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் தினேஷ், நந்திதா, சரத் லோகிதஸ்வா, பால சரவணன், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன். செஃப் தாமோதரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் 'அட்டகத்தி' படத்திற்கு இரண்டாவது முறையாக தினேஷ் - நந்திதா இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 22-இல் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 29-இல் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ulkuthu movie new release dateulkuthu movie new release date

உள்குத்து படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு