ads
இயக்குனர் பாலா படத்தின் நாயகி இந்த பிரபல நடிகரின் மகளா?
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 14, 2017 12:05 ISTபொழுதுபோக்கு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம், டோலிவுட் திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது. காதல் கலந்த அதிரடி த்ரில்லராக உருவாக்கி இருந்த அர்ஜுன் ரெட்டி படத்தினை சந்தீப் ரெட்டி இயக்கியிருந்தார்.
இந்நிலையில் 'சீயான்' விக்ரம் 'அர்ஜுன் ரெட்டி' படத்தினை தமிழில் ரீமேக் செய்து அவரது மகனான த்ருவ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார். இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கு இயக்குனர் பாலாவை தேர்வு செய்தார் விக்ரம். 'சேது' படத்தின் மூலம் விக்ரமின் திரையுலக வாழ்கை நல்ல ஏற்றத்தை அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. வர்மா என்ற தலைப்பில் வெளியிட்ட பஸ்ட் லுக் இது வரை பார்த்திராத புது வித தோற்றத்தில் இருந்ததால் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து அதிகளவு லைக் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் நாயகிக்கான தேர்வுகள் நடைபெற்று இருக்கும் தருணத்தில் கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிப்பதற்கு அதிகளவு வாய்ப்பிருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல்கள் உறுதிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷரா ஹாசன் தல அஜித்தின் விவேகம் படத்தில் நடித்துள்ளார்.