ads
வசந்த் பாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் ஜெயில்
புருசோத்தமன் (Author) Published Date : Aug 05, 2018 16:28 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், நாச்சியார், செம படங்களுக்கு பிறகு 100% காதல், 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு 'வெயில்' படத்தின் மூலம் தன்னை திரைத்துறைக்கு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்த பாலன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் புதுமுக நடிகையாக அபர்ணா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இசையமைப்பாளாராகவும் ஜிவி பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 'ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மற்றொரு நாயகியாகவும் 'செம' படத்தில் நாயகியாக நடித்த அர்த்தனா பினு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படம் சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கண்ணகி நகர் மக்களின் வாழ்க்கை நிலையை உணர்த்தும் விதமாக உருவாகி வருகிறது. மூன்று காலகட்டங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா மேற்கொள்கிறார்.