ads

'வீரா' படம் வெளியாவதில் சிக்கல் - ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்

veera movie release postponed

veera movie release postponed

இன்றைய திரை உலகில் படம் பார்ப்பவர்களை விட  நடிப்பவர்கள் அதிகமாகி கொண்டே செல்கின்றனர். திரையுலகில் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை திரைக்கு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திரைப்படங்களால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. முன்னதாக ரிலீஸ் ஆன படங்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது புதியதாக ஒரு படத்தினை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் திரைப்படங்கள் வெளியாவதற்கு வண்டிகட்டி நிற்கின்றன. இன்று மட்டும் 7 படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த தீரன் அதிகாரம் ஒன்று, திருட்டு பயலே 2, அண்ணாதுரை, ரிச்சி, சத்யா போன்ற படங்கள் தற்போது திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று 'மாயவன்' ரிலீஸ் ஆனது. இன்று அருவி, பிரம்மா டாட் காம்,  சென்னை-2 சிங்கப்பூர், கிடா விருந்து, பள்ளிப்பருவத்திலே, வீரா மற்றும் ஆங்கில படமான கிரிமினல் போன்ற 8 படங்கள் திரைக்கு வரவுள்ளது.

இதில் 'வீரா' படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை 'வீரா' படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆகையால் நாளை 7 படங்கள் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டே நாளில் 8 படங்கள் வெளிவரவுள்ளதால் இதில் எத்தனை படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. டிசம்பர் 22-இல் பெரிய படங்கள் வெளிவரவுள்ளதால் அதற்கு முன்னதாகவே இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திரைக்கு கொண்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

'வீரா' படம் வெளியாவதில் சிக்கல் - ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்