ads

அருவி ட்ரைலர் வெளியீடு

Aruvi Movie Poster

Aruvi Movie Poster

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 'அருவி' படத்தினை தயாரித்து வருகிறது. ஒரு நல்ல பெண்ணினால் சமுதாயத்துடன் ஒன்றி வாழமுடியாமல் ஏற்படும் கஷ்டத்தின் வலியை மையப்படுத்தி எடுத்து வரும் இப்படத்தினை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார்.  

பிந்து மாலினி மற்றும் வேதாந்த பரட்வஜ் இசையமைத்துள்ளார். ஷெல்லி சலிஸ்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்பட்டத்தில் அதிதி பாலன், லட்சுமி கோபாலஸ்வாமி, ஷுவெத சேகர் போன்ற புது முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ட்ரைலரை படக்குழு வெளியிடவுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 15ம் தேதி படத்தினை வெளியிடுவதால் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.   

அருவி ட்ரைலர் வெளியீடு