ads
தீரன் அதிகாரம் ஒன்று - காட்சி, வசனம் நீக்கம்
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 28, 2017 18:57 ISTபொழுதுபோக்கு
வினோத் இயக்கத்தில் கார்த்தி அதிரடி வேட்டையில் களமிறங்கி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வரவேற்புகள், விமர்சனங்கள், பிரபலகளின் பாராட்டுகள் என அனைத்திலும் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்நிலையில் படத்தின் ஒரு வார்த்தையும், காட்சியும் குறிப்பிட்ட சமூகத்தினரின் மனம் புண்படும்படி இருப்பதினால் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதன் காரணத்தினால் படக்குழுவினர் அந்த வசனம் மற்றும் காட்சியை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது. மேலும் படக்குழுவினர் பின்வருமாறு வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இப்படத்தில் காட்டப்படவில்லை. இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி கருதுவதால் அதற்காக 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இனி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறோம்.