வேலைக்காரன் மோஷன் போஸ்டர் வெளியீடு

       பதிவு : Dec 05, 2017 10:28 IST    
Velaikkaran motion poster Velaikkaran motion poster

தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா வேலைக்காரன் படத்தினை சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கிவருகிறார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மலையாள முன்னணி நடிகர் பாஹத் ஃபாசில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் இணைந்து சினேகா, பிரகாஷ் ராஜ், ஆர்ஜே. பாலாஜி, சதீஸ், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். 

24 AM Studios தயாரிப்பு நிறுவத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து வெற்றி அடைய வைத்த ரசிகர்களுக்கு ஒரு வீடியோ மூலம் அனிருத்  நன்றியை தெரிவித்திருந்தார். 

 

படத்தினை கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவதினால் ரசிகர்கள் ஆரவாரத்தோடு எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தகவலை தெரிவித்ததினை தொடர்ந்து ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். 


வேலைக்காரன் மோஷன் போஸ்டர் வெளியீடு


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்