ads

சிரஞ்சீவியின் சயீரா நரசிம்மரெட்டி படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம்

sye raa narasimha reddy movie vijay sethupathi character

sye raa narasimha reddy movie vijay sethupathi character

தெலுங்கின் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி தற்போது 'சயிரா நரசிம்ம ரெட்டி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து தமிழ் திரையுலகின் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா போன்ற பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தினை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேல் அவரது டிவிட்டரில் பதிவு செய்து தகவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாபத்திரம் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் முதன் முதலாக அறிமுகமாகும் இந்த படத்தில் 'ஒப்பாயா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சயிரா நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தின் வலது கதாபாத்திரமாகவும், சாயிராவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாகவும் நடிக்க உள்ளார். இது சிரஞ்சீவியின் பெரும்பாலான காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரமாகும். இதன் மூலம் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பிடிக்கும் என்றும் இதனால் தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

SYE RAA NARASIMHA REDDY Chiranjeevi telugu posterSYE RAA NARASIMHA REDDY Chiranjeevi telugu poster
SYE RAA NARASIMHA REDDY stillsSYE RAA NARASIMHA REDDY stills
SYE RAA NARASIMHA REDDY britishSYE RAA NARASIMHA REDDY british
SYE RAA NARASIMHA REDDY ChiranjeeviSYE RAA NARASIMHA REDDY Chiranjeevi

சிரஞ்சீவியின் சயீரா நரசிம்மரெட்டி படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம்