ads
திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்ற விஜய் சேதுபதியின் மேற்கு தொடர்ச்சி மலை
வேலுசாமி (Author) Published Date : Apr 17, 2018 10:34 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரைத்துறையில் விஜய் சேதுபதி நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை அமைப்பாளர் மற்றும் பாடகர் என தனது திறமைகளை நிரூபித்து வருகிறார். இவர் கடந்த 2004இல் இருந்து திரைத்துறையில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பிட்சா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படங்களாகவே அமைந்தது.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராக தனது 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என புது திறமைகளை மேற்கொண்டிருந்தார். தற்போது 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, சயிரா நரசிம்ம ரெட்டி, இடம்பொருள் ஏவல், செக்க சிவந்த வானம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது தனது 'விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ்' மூலம் 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படம் இளையராஜா இசையமைப்பில் இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனராக இருந்த லெனின் என்பவர் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸ் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை பெற்றுள்ளது.
சிறந்த இயக்குனர்கள் மற்றும் நல்ல படங்களுக்கு ரிலீஸ் ஆவதற்கு முன்பே விருதுகளை பெறுவது, பெருமையாக இருக்கும். இதே போல் தற்போது ஒரு தயாரிப்பாளராக இந்த படம் விஜய் சேதுபதிக்கு புது அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து விஜய் சேதுபதி தனது ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் 'ஜூங்கா' படத்தினை தயாரித்து வருகிறார்.