ads

கீ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி

vijay sethupathi speech on kee movie audio launch

vijay sethupathi speech on kee movie audio launch

சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் தயாரித்துள்ள படம் 'கீ'. இந்த படத்தில் நாயகனாக ஜீவா நடிக்க நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் காலீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. நேற்று சென்னையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன், பிஎல் தேனப்பன், விஷால், ஜீவா, நிக்கி கல்ராணி  உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னதாக பேசிய தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன், தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் சிம்பு மீது அளித்த புகாருக்கு இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இது இசை வெளியீட்டு விழாவில் பெரும் சலசலப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இதனால் நடிகர் விஜய் சேதுபதி விழாவில் இருந்து வெளியேற முயன்றுள்ளார். அதன்பின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மற்றும் படக்குழுவினர் விஜய் சேதுபதியை சமாதானபடுத்தி உட்கார வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய விஷால் "மைக்கல் ராயப்பன் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயாராகவுள்ளேன்.

படம் வெற்றி அடைந்தாள் அவர் தரும் பணத்தை பெற்று கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி "சினிமாக்காரர்கள் என்றால் ஒரு மாதிரி பாக்கிறார்கள், ஏதோ தரம் குறைவாகவும், கேவலமாகவும் பார்க்கிறார்கள். எங்களை ஏன் அப்படி கேவலமாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு படம் உருவாவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?, அதை படம் எடுத்து பார்த்தல் தான் தெரியும். உயிர் போய் உயிர் வந்துவிடுகிறது." என்று தெரிவித்துள்ளார்.

கீ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி