உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் விக்ரம் பிரபு சலீம் இயக்குனரின் புதுபடம்

       பதிவு : May 30, 2018 11:11 IST    
துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு சலீம் இயக்குனருடன் இணைந்துள்ளார். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது. துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு சலீம் இயக்குனருடன் இணைந்துள்ளார். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது.

நடிகர் மற்றும் சிவாஜி கணேசனின் வாரிசான விக்ரம் பிரபு 2012இல் கும்கி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி கடந்த 6 வருடங்களில் 11 படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு வெள்ளைக்கார துரை படத்திற்கு பிறகு வெளியான இது என்ன மாயம், வாகா, வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா போன்ற படங்கள் தோல்வியிலே முடிந்துள்ளது. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பக்கா படமும் கை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் துப்பாக்கி முனை படமும், புதுமுக இயக்குனர் ராஜதீப் இயக்கத்தில் அசுரகுரு படமும் உருவாகி வருகிறது.

இவருடைய நடிப்பில் முன்னதாக வெளியான காதல் கலந்த காமெடி படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் தற்போது த்ரில்லரில் களமிறங்கியுள்ளார். இதனால் தற்போது விஜய் ஆண்டனியின் சலீம் படத்தை இயக்கிய என்வி நிர்மல் குமாருடன் இணைந்துள்ளார். 2014இல் இவருடைய இயக்கத்தில் வெளியான சலீம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவர் தற்போது அரவிந் சாமி, த்ரிஷா ஆகியோரை வைத்து 'சதுரங்க வேட்டை 2' படத்தை இயக்கி வருகிறார்.

 

இந்த படத்தின் பணிகளை முடித்த பிறகு விக்ரம் பிரபுவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். சதுரங்க வேட்டை 2 படத்திற்கு பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த படத்தை ஒதுக்கி விட்டு விக்ரம் பிரபுவுடன் கை கோர்த்துள்ளார் நிர்மல் குமார். இந்த படம் 2008இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்க உள்ளது.


உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகும் விக்ரம் பிரபு சலீம் இயக்குனரின் புதுபடம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்