ads
விஷாலின் இரும்புத்திரை படத்தின் இசை வெளியீடு
ராசு (Author) Published Date : Jan 09, 2018 12:10 ISTபொழுதுபோக்கு
தயாரிப்பு சங்க தலைவர், நடிகர் சங்க செயலாளருமான விஷால் தற்பொழுது பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' மற்றும் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கு முன்னதாகவே பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இரும்புத்திரை' படத்தினை தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'வில்லன்' படத்தில் நடிகர் விஷால் இணைந்து நடித்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை மலையாள திரையுலகில் பிடித்துள்ளார். இந்நிலையில் 'இரும்புத்திரை' படத்தின் எதிர்பார்ப்புகள் தெலுங்கு திரையுலகில் அதிகரித்துள்ளது. விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர், டீசர், யார் இவன் சிங்கிள் ட்ராக் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். ஜனவரி 26ல் வெளியிட உள்ள இப்படத்தின் இசையை விரைவில் வெளியிடுவதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.