நான்காவது முறையாக விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா

       பதிவு : Mar 21, 2018 18:22 IST    
விஜய் சேதுபதி, இயக்குனர் அருண்குமார் இணைந்துள்ள புதுப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விஜய் சேதுபதி, இயக்குனர் அருண்குமார் இணைந்துள்ள புதுப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திற்கு பிறகு, 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, இடம் பொருள் ஏவல், செக்க சிவந்த வானம் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி, 'சேதுபதி' படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்யு அருண் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பதமினியும், சேதுபதி மற்றும் சீரோ போன்ற படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணையவுள்ளார். தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் 'தர்மதுரை' படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதனை அடுத்து தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் மற்றும் இடம் பொருள் ஏவல் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது யுவன் சங்கர் ராஜா நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதுப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அஞ்சலியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'இறைவி' படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ள அஞ்சலி இந்த படத்திலும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளனர்.

 


நான்காவது முறையாக விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்