ads

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை முட்டாளாக்கிய கூகுள்

பிரபல தேடுதல் பொறியான கூகுள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முட்டாள் பட்டத்தை சூட்டியுள்ளது.

பிரபல தேடுதல் பொறியான கூகுள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முட்டாள் பட்டத்தை சூட்டியுள்ளது.

உலகம் முழுவதும் பல பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு தேடுதல் பொறியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது கூகுள். பிரவுசரில் கூகுள் தேடல் மூலம் மக்கள் தேடும் வார்த்தைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் காண்பிக்கிறது. இந்நிலையில் தற்போது கூகுள் தேடலில் 'IDIOT' என்ற வார்த்தையை தேடினால் டொனால்ட் ட்ரம்பின் ஏராளமான புகைப்படங்களை காண்பிக்கிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றத்தில் இருந்து இவருடைய அதிரடி திட்டங்கள் மற்றும் முடிவுகளால் உலகம் முழுவதும் ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதனால் ரெட்டிட் என்ற இணையதளம் மூலமாக ட்ரம்பை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் முட்டாள் (IDIOT) என்ற வார்த்தையுடன் ட்ரம்பின் புகைப்படத்தை இணைத்து பரப்ப செய்துள்ளனர்.

இது தற்போது வேகமாக பரவி உலக அளவில் ட்ரெண்டாகி தற்போது IDIOT என்று தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் காண்பிக்கிறது. டொனால்டு ட்ரம்பிற்கு முன்பு 'பேக்கு' என்ற இந்தி வார்த்தைக்கு நரேந்திர மோடி புகைப்படமும், 'பப்பு' என்ற வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி புகைப்படமும் கூகுளில் காண்பிக்கப்பட்டு சர்ச்சையாக மாறியது. இவர்களை தொடர்ந்து தற்போது டொனால்டு டிரம்பும் இந்த சர்ச்சையில் முட்டாளாக சிக்கியுள்ளார்.

கூகுளில் IDIOT என்று தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் காண்பிக்கிறது.கூகுளில் IDIOT என்று தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் காண்பிக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை முட்டாளாக்கிய கூகுள்