ads

சத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20 இடங்களில் ரெய்டு

it raid in sathyam cinemas

it raid in sathyam cinemas

சமீபத்தில் சசிகலா, தினகரன் மற்றும் சசிகலா உறவினர்கள் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிவில் பல்வேறு ஆவணங்கள், ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், பென்ட்ரைவ் மற்றும் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை கைப்பற்றினர். பறிமுதல் செய்த லேப்டாப், பென்ட்ரைவ் மற்றும் பண பரிமாற்றம் சம்பந்தமான கடிதங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு சொத்துக்களின் விபரங்கள் வசமாக சிக்கியது. மேலும் இவர்களது 20 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து தற்போது சத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சசிகலா தரப்பு சத்யம் குழுமத்தினரிடம் ஜாஸ் சினிமாஸை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. இதனை உறுதிப்படுத்தவே வருமான வரித்துறையினர் இந்த சோதனை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய 'பனாமா பேப்பர்ஸ்' தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த சோதனைக்கும் இன்றைய சோதனைக்கும் தொடர்பில்லை வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் அடிப்படையில் சோதனை நடக்கிறது என்று வருமான வரித்துறையினர் இதனை மறுத்துள்ளனர்.

சத்யம் தியேட்டருக்கு சொந்தமான 20 இடங்களில் ரெய்டு