நீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி

       பதிவு : Apr 11, 2018 11:27 IST    
சென்னை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியதை அடுத்து ஹர்பஜன் சிங் தமிழில் மீண்டும் எதுகை மோனையில் ட்வீட் செய்துள்ளார். சென்னை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியதை அடுத்து ஹர்பஜன் சிங் தமிழில் மீண்டும் எதுகை மோனையில் ட்வீட் செய்துள்ளார்.

நேற்று பலத்த எதிர்ப்புகளுக்கு ரசிகர்களின் ஆரவாரத்திற்கும் மத்தியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி அதிரடியாக ஆடி சென்னை அணிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இதனை சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டதால் இந்த இலக்கை சுலபமாக அடைந்து அணியை வெற்றிபெற செய்தனர்.

சென்னை அணி, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுடன் மோதிய இரண்டு ஆட்டத்திலும் அபார வெற்றி அடைந்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்களும் சென்னை வீரர்களும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டரில் நடிகர் டிஆரை போன்ற எதுகை மோனை வசனத்துடன் தனது மகிழ்ச்சியினை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் "மெட்ராஸ்ல  இருக்குது கிண்டி
நீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டி
நீ அடிக்கிற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி
@chennaiipl கூட ஆடுனா உனக்கு அல்லு கேரெண்டீ 
போயிறுவியா என் ஏரியாவ தாண்டி
செம மேட்ச் மாமா.." என்று பதிவு செய்துள்ளார். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ட்வீட் கண்டிப்பாக டிஆர் தான் போட்டிருக்க வேண்டும் என்று கேலியுடன் பதிவு செய்துள்ளது.

 


நீ அடிக்கிற பந்து போயிருமாடா என்ன தாண்டி..சிஎஸ்கே கூட ஆடுன அல்லு கேரண்டி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்