ads

கொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னைல ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார் தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 203 ரன் இலக்கை எட்டி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 203 ரன் இலக்கை எட்டி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், நியூட்ரினோ எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களுக்கு மத்தியில் ஐபிஎல்லின் 11வது சீசன் கிரிக்கெட் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்கிசின் முதல் போட்டி மும்பையில் நடந்த நிலையில் இரண்டாவது போட்டி சென்னையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. தமிழகத்தில் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை எந்த ஐபிஎல் போட்டியும் நடைபெற கூடாது என்று பல அரசியல் காட்சிகள், சினிமா பிரபலங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் ஐபிஎல்லுக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வந்தது.

இதனால் ஐபிஎல் நிர்வாகம் செல்போன் எடுத்துவர மட்டும் அனுமதி அளித்து பேனர், கொடி போன்ற எந்த பொருளும் மைதானத்தினுள் எடுத்து செல்ல கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து கடும் எதிர்ப்புகள் மத்தியிலும், ரசிகர்களின் பலத்த ஆர்வத்திற்கு மத்தியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதன் பிறகு முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலே சிக்ஸராக குவித்த சுனில் நரேனை இரண்டாவது ஓவரிலே ஹர்பஜன் சிங் தனது திறமையால் சாய்த்தார். இதன் பிறகு களமிறங்கிய ராபின் உத்தப்பா, 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் சிறப்பான திறமையால் ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து கிறிஸ் லின் 22 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பவுலிங்கிலும், நிதிஸ் ராணா, வாட்சன் பந்து வீச்சில் தோனி கைகளாலும் ஆட்டமிழந்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் பிராவோ கைகளால் தாகூர் பந்து வீச்சில் 2 ரன்களில் ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அணியின் ஸ்கொரை பலமாக உயர்த்தினர்.ஆனால் தினேஷ் கார்த்திக் 26 ரன்களில் ஆட்டமிழக்க ரஸ்ஸல் குர்ரான் என்பவருடன் ஜோடி சேர்ந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்திருந்தது.

இதில் ஆண்ட்ரே ரஸ்ஸல் மனுசனா மிருகமா என்று கேட்கும் அளவிற்கு சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை அலற செய்தார். ஒரு கட்டத்தில் சிக்ஸர் அடிக்கும் போது இவர் அடித்த பந்து 102 மீட்டர் உயரத்தில் ஸ்டேடியத்திற்கு வெளியே சென்று விட்டது. இதனை ஷாருக்கான் மட்டுமில்லாமல் ஆடியன்ஸ் அனைவரும் தலையை தூக்கியபடி வியந்து பார்த்தனர். இவர் 36 பந்தில் 88 ரன்களுடன், 11 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 203 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது சென்னை அணிக்கு சிரமமாக இருந்தாலும் அதை உடைத்தெறிந்து காட்டுவேன் என்ற நோக்குடன் சென்னை வீரர்கள் களமிறங்கினர். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலே அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். தொடக்கத்திலே மூன்று சிக்சரும், மூன்று பவுண்டரியும் விளாசிய வாட்சன் 19 பந்தில் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

இதன் பிறகு சுரேஷ் ரெய்னா ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இதில் சுரேஷ் ரெய்னா 14 ரன்கள் எடுத்த போதும், அம்பதி ராயுடு 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதில் அம்பதி ராயுடு இரண்டு சிக்சரும், மூன்று பவுண்டரியும் விளாசியுள்ளார். இதன் பிறகு தோனியும், சாம் பில்லிங்க்ஸும் அதிரடியாக ஜோடி சேர்ந்தனர். இதில் சாம் பில்லிங்ஸ் அரை சதம் அடித்து 56 ரன்களிலும், தோனி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் அதிரடியாக ஆடியதால் ஆட்டம் ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

சென்னை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்த போது சாம் பில்லிங்ஸ் அவுட் ஆனார். இதனை அடுத்து ஜடேஜாவும், ப்ராவோவும் இறுதியாக ஜோடி சேர்ந்தனர். 9 பந்தில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலில் இருந்த போது களமிறங்கிய ப்ராவோவும், ஜடேஜாவும் சிக்ஸர், பவுண்டரியாக விளாசி இறுதியாக 2 பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. பின்னர் இறுதியாக பேட்டிங் செய்த ஜடேஜா ஆட்டத்தின் 19.5 பந்தில் சிக்ஸராக தூக்கி அணியை அபாரமாக வெற்றி பெற செய்தார்.

ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத இந்த வெற்றியை சென்னை வீரர்கள் சுலபமாக முறியடித்தனர். கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் 200 ரன்களை தொட்டது. ஆனால் சென்னை அணியில் களமிறங்கிய ஒவ்வொரு வீரரும் சிக்ஸர், பவுண்டரியாக தெறிக்க விட்டதால் இந்த வெற்றியை சென்னை அணியால் சுலபமாக அடைய முடிந்தது. கொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னை வீரர்கள் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் தான்.. என்று இந்த வெற்றியின் மூலம் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கொல்கத்தாவுல ரஸ்ஸல்னா..சென்னைல ஒவ்வொரு வீரரும் சூப்பர் ஸ்டார் தான்