சென்னை அணிக்காக மீண்டும் ஒன்றிணைந்த பிரபு தேவா தோனி

       பதிவு : Mar 23, 2018 17:01 IST    
சென்னை அணியின் ப்ரோமோஷன் விடியோவுக்காக தற்போது மீண்டும் பிரபு தேவா மற்றும் தோனி ஒன்றிணைந்துள்ளனர். சென்னை அணியின் ப்ரோமோஷன் விடியோவுக்காக தற்போது மீண்டும் பிரபு தேவா மற்றும் தோனி ஒன்றிணைந்துள்ளனர்.

நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா தற்போது யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, லக்ஷ்மி, காமாஷி போன்ற படங்களில் பிசியாக உள்ளார். இவருடைய நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்குரி' படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் இணைந்துள்ளார்.

பிரபு தேவா மற்றும் தோனி ஆகியோர் இணைந்து முன்னதாக டிவிஎஸ் விளம்பரத்தில் லுங்கி டான்ஸ் ஆடியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தோனியும், பிரபு தேவாவும் இணைந்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள ஐபிஎல் சீசனுக்காக சென்னை அணி தயாராகி வருகிறது. தற்போது ப்ரமோஷனில் ஈடுபட்டுள்ள சென்னை அணி வீரர்கள் சமீபத்தில் சென்னை வந்தடைந்தனர்.

இதன் மஞ்சள் ஜெர்சி அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து சென்னை அணியின் ப்ரோமோஷன் வீடியோ இன்று தயாராக உள்ளது. இந்த விளம்பர வீடியோவில் சென்னை வீரர்கள் உள்பட நடிகர் பிரபு தேவாவும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரபு தேவா மற்றும் தோனியின் லுங்கி டான்ஸ் ரசிகர்களிடம் பிரபலமான நிலையில் சென்னை அணியின் இந்த ப்ரோமோஷன் விடியோவுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

 


சென்னை அணிக்காக மீண்டும் ஒன்றிணைந்த பிரபு தேவா தோனி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்