ads
வைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து
வேலுசாமி (Author) Published Date : May 21, 2018 17:46 ISTSports News
இந்தியாவின் ஐபிஎல் 2018 11வது சீசன் விறுவிறுப்பாக பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த 57 ஐபிஎல்லில் தலா 9 போட்டிகளில் வென்று ஐதராபாத் அணியும், சென்னை அணியும் முன்னணியில் உள்ளது. நேற்று நடந்த 57வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி, பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. இந்த போட்டியின் போது அணியின் உரிமையாளரான ப்ரீத்தி சிண்டா அணி வெற்றி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக இருந்தார்.
ஆனால் இவரின் உற்சாகம் நீண்ட நேரத்திற்கு நீடிக்க வில்லை. இந்த தோல்வியினால் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த போட்டியின் போது அணியின் உரிமையாளர் ப்ரீத்தி சிண்டா அருகிலுள்ள நிருவாகரிடம் 'பிளே ஆப் சுற்றிலிருந்து மும்பை அணி வெளியேறியதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு கலந்து கொண்ட 8 அணிகளில் மும்பை, பஞ்சாப், பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது. மேலும் நாளை சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான முதல் பிளே ஆப் சுற்று நடக்க உள்ளது. இந்த போட்டியில் வெல்பவர்கள் 27-ஆம் தேதி நடக்க உள்ள பைனலுக்கு தகுதி அடைவார்கள். இதனால் நாளை நடைபெற உள்ள போட்டிக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
Did #PreityZinta just say “I am just very happy that Mumbai is not going to the finals..Really happy†🤔 #CSKvKXIP #MIvsDD #IPL #IPL2018 pic.twitter.com/KWaxSUZYZh
— Jo (@jogtweets) May 20, 2018