ads

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்த தினேஷ் கார்த்திக் இந்தியா பெருமிதம்

முத்தரப்பு T20 கோப்பை தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றி.

முத்தரப்பு T20 கோப்பை தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா த்ரில் வெற்றி.

நிதாஹஸ் T20 கோப்பை இலங்கையில் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் முன்னதாக நடைபெற்ற இலங்கை, வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியில் இலங்கை தோல்வியுற்றது. இதனால் வங்கதேச அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான நிதாஹஸ் முத்தரப்பு இறுதி போட்டி நேற்று இலங்கை பிரேமதேச சர்வதேச மைதானத்தில் நடந்தது.

இந்த இறுதி போட்டி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் பிறகு பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இஃபால் மற்றும் லிடோன் டோஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் 15 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக சபீர் ரஹ்மான் மற்றும் சௌமியா சர்க்கார் ஜோடி சேர்ந்தனர்.

இதில் ரஹ்மான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கொரை உயர்த்தினார். இவர் 50 பந்துகளில் 77 ரன்களை குவித்து 4 சிக்ஸரையும், 7 பவுண்டரிகளையும் விளாசினார். இவர் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 166 ரன்களை எடுத்தது. இதன் பிறகு 167 ரன்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். தவான் 10 ரன்களில் ஆட்டமிழக்க அணியின் கேப்டன் ரோகித் சர்மா 42 பந்துகளில் 3 சிக்ஸரையும், 4 பவுண்டரிகளையும் அடித்து 56 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களை எதிர்பார்ப்பை தவறவிட்டார்.

இதன் பிறகு ராகுல் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ராகுல் 24 ரன்களிலும், மனிஷ் பாண்டே 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வீரர்களாக தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஆட்டத்தின் 19வது ஓவர் முடிவில் இந்தியா கடைசி ஓவருக்கு 11 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. கின் கடைசி ஓவர் பரபரப்பின் உச்சிக்கே சென்றது.

 19 ஓவரை சர்க்கார் வீசினார். முதல் பந்து அகல பந்தாக சென்றது. மீண்டும் முதல் பாலை வீச விஜய் சங்கர் அதனை அடிக்காமல் விட்டுவிட்டார். இரண்டு மற்றும் மூன்றாவது பந்தில் இருவரும் ஒரு ரன்களை எடுத்தனர். நான்காவது பந்தை விஜய் சங்கர் சந்தித்தார். இந்த பந்தை பவுண்டரிக்கு அடித்து இலக்கை குறைத்தார். பின்னர் ஐந்தாவது பந்தில் விஜய் சங்கர் அவுட்டாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் சந்திக்க ஒரு பந்தில் 5 ரன்களை எடுக்கும் நிலையில் இருந்தது. ஒரு பந்தில் 5 ரன்கள் இந்தியாவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு விளாசி இந்தியாவை திரில் வெற்றி பெற செய்தார். தினேஷ் கார்த்திக் 8 பந்துகளை மட்டும் சந்தித்து 3 சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் அடித்து 29 ரன்களை குவித்துள்ளார்.

கடைசி ஒரு பந்தில் சிக்ஸர் அடிப்பது தற்போது முன்னணி வீரர்களே தயங்கும் நிலையில் தினேஷ் கார்த்தி அதனை முறியடித்தார். அவரின் இந்த வீரதீர செயலுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறார். கடைசி பந்தில் கோப்பையை வெற்றி பெற செய்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும்  சினிமா பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்தியால் கோப்பையை வென்றது இந்தியா.தினேஷ் கார்த்தியால் கோப்பையை வென்றது இந்தியா.

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்த தினேஷ் கார்த்திக் இந்தியா பெருமிதம்