தனுஷின் மாரி 2 படப்பிடிப்பு தகவல்

By : Rathiga       Published On : Feb 09, 2018 14:09 IST    
dhanush maari 2 shooting updates dhanush maari 2 shooting updates

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'மாரி' . இந்த படத்தில் நடிகர் தனுஷ் லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தை புதுவிதமாக கையாண்டு மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் படத்தில் இடம் பெற்ற அனிருத்தின் பாடலுக்கும் இன்றளவும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் தனுஷின் அதிரடி வசனம் மற்றும் சண்டை காட்சிகள், ரோபோ சங்கரின் காமெடிகள் போன்றவை அதிகளவு ரசிகர்களிடம் பேசப்பட்டது. படத்திற்கு கிடைத்த வெற்றியின் காரணத்தினால் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாகிவருகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தென்காசி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்டத்தின் அனைத்து வித காட்சிகளையும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது. மேலும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இம்மாத இறுதியில் சென்னை பகுதியில் எடுக்கவிருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி இணைந்துள்ளார். முதல் முறையாக இணைந்திருக்கும் இந்த ஜோடியுடன் கிருஷ்ணா, மலையாள நடிகர் டோவினோ தாம்ஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளையும் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.     


தனுஷின் மாரி 2 படப்பிடிப்பு தகவல்


  Tags :