ads

வாடிகன் நகரில் சிக்ரெட் விற்பனைக்கு தடை - போப் ஆண்டவர்

வாடிகன் நகரில் சிக்ரெட் விற்பனைக்கு தடை - போப் ஆண்டவர்

வாடிகன் நகரில் சிக்ரெட் விற்பனைக்கு தடை - போப் ஆண்டவர்

ஆண்டுதோறும் புகை பிடிப்பதால் 72 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. இன்றைய உலகில் மனிதனை மனிதனே அழித்துக்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. சுகாதாரம், சுற்றுசூழல் மற்றும் காற்று மாசுபாட்டை அதிகரிக்க தொழிற்சாலைகள் மற்றும் அவற்றில் இருந்து வெளிவரும் புகை, வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது போன்றவையும், மழை வராமல் தடுக்க மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்து நகரம் உருவாக்குதல் போன்றவையும், ஏரி, குளங்கள் மற்றும் ஆறுகள் இவைகளை அழிக்க தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கருவேல மரங்கள் போன்றவைகள் பெரிதும் உதவுகிறது. மனிதனை அழிப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான் இந்த சிகரெட்டும், மதுவும். 

இது தவிர நகரத்திற்கு சென்றாலே வியர்வை ஊற்றுகிறது இதற்கு காரணம் வீடுகள், அலுவலகங்களில் வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்கள் தங்கள் வீடுகளை குளிர்வாக வைத்திருக்க அங்கு இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி வெப்பத்தை அதிகப்படுத்துகின்றனர். இதை தான் அனைத்து மக்களும் செய்கின்றனர் இந்த செயலை தான் நாகரிக வளர்ச்சி என்கிறோம். இவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டது. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் கேடு விளைவிக்கும் என்று தொலைக்காட்சி சினிமா என்று அனைத்து விளம்பரங்களிலும் மற்றும் ஆங்காங்கே விழிப்புணர்வையும் மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை கருத்தில் கொள்ள மக்கள் மனம் ஏற்க மறுக்கிறது. புகைபிடிப்பது தவறு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கும் அரசாங்கமே அதை விற்பது வேதனை அளிக்கிறது. அரசாங்கத்திற்கு அதிக வருமானம் வரும் தொழிலே இந்த சிக்ரெட்டும், மதுவும் தான். இதை ஒழிப்பது மிக கடினம்.

இந்நிலையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக விளங்கும் வாடிகன் நகரம் போப் ஆண்டவரின் ஆளுமையின் கீழ் உள்ளது. ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. தற்போது போப் ஆண்டவர் வாடிகன் நகரில் சிக்ரெட் விற்க தடைவிதித்துள்ளார். இந்த உத்தரவு அடுத்த வருடம் முதல் அமலுக்கு வருகிறது. இதனை பற்றி வாடிகன் நகரின் செய்தி அலுவலக இயக்குனர் கிரெக் புர்கி கூறும்போது, “மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் எந்த ஒரு செயலுக்கும் புனித நகரம் தனது பங்களிப்பை அளிக்காது. சிகரெட்டுகள் வாடிகன் நகரின் வருவாய் முக்கிய ஆதாரமாக இருப்பது உண்மைதான். ஆனால் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு வருவாயும் லாபமாக இருக்காது” என்று கூறினார்.

இந்த உத்தரவினால் வாடிகன் நகருக்கு 72 கோடி இழப்பு ஏற்படும். இருந்தாலும் மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் எந்த பொருளையும் அனுமதிக்க கூடாது என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். விவசாயத்தை மறந்து எப்போது இயற்கையை அனுபவிக்காமல் மனிதர்கள் அதை அழிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே அழிவும் ஆரம்பமாகிவிட்டது. இந்த வகையிலான உத்தரவை உலகெங்கும் தெரிவித்தால் மனித அழிவை சற்று தள்ளி போடலாம். 

வாடிகன் நகரில் சிக்ரெட் விற்பனைக்கு தடை - போப் ஆண்டவர்