நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் பிக் பாஸ் பிரபலம்

       பதிவு : Nov 13, 2017 15:00 IST    
நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் பிக் பாஸ் பிரபலம்

விஜய் டிவி-யில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாயினர். இதன் காரணத்தினால் அதில் கடந்து கொண்ட பலருக்கு விளம்பங்கள், தொகுப்பாளர், படத்தில் நடிப்பது என பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தனது உண்மையான கேரக்டரை வெளிபடுத்திய சிலரில் ஒருவரான கணேஷ் வெங்கட்ராமன் அனைவரின் மனதில் இடம் பிடுத்திருந்தார். 

தமிழ் திரையுலகில் அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமாகி, உன்னைப்போல் ஒருவன், இவன் வேறமாதிரி, தனி ஒருவன், தொடரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரின் உடல் அமைப்பிற்கு பெரும்பாலும் போலீஸ் வேடத்தில் நடித்து திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.      

 

இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மீண்டும் 'மை ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் களமிறங்கவுள்ளார். ரோஷ்ணி பணிக்கர் இயக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ் நடிக்கயிருப்பதாகவும், இவருடன் இணைந்து பார்வதி மேனன், மனோஜ் போன்றவர்கள் நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தில் கணேஷ் வெங்கட் முக்கிய வேடத்தில் அதிரடியாக இறங்க உள்ளார்.      


நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் பிக் பாஸ் பிரபலம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்