ads

நடிகர் பொன்வண்ணனின் ராஜினாமாவை நிராகரித்த நடிகர் சங்கம்

nadigar sangam refused ponvannan resignation

nadigar sangam refused ponvannan resignation

தமிழ் திரையுலகின் நடிகர் சங்க பொது செயலாளர், நடிகருமான விஷால் தற்பொழுது ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு கொடுத்ததில் இருந்து அனைத்து பக்கமும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் அவரது பதவியை ராஜினாமா செய்வதாக சங்கத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார். இதன் காரணத்தினால் நடிகர் சங்க நிறுவனத்தில் பரபரப்பு அதிகரித்து உள்ளது.

'நடிகர் சங்கத்தில் அரசியல் இருப்பது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. நடிகர் விஷால் அரசியலில் நிற்பது அவரது தனிப்பட்ட முடிவு என்றாலும் சங்கத்துடன் இணைவது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் இருக்க கூடாது என்பதற்காகவே நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு துணை தலைவர் ஆனேன்' என்று பொன்வண்ணன் கூறியுள்ளார். 

இந்நிலையில் அவரின் ராஜினாமா கடிதத்தினை தொடர்ந்து நேற்று நடிகர் சங்கத்தில் அவசர குழு கூட்டப்பட்டு ராஜினாமா கடித்ததில் வெளிவந்த கருத்துக்களை விவாதிக்க பட்டனர். இறுதியில் நடிகர் சங்க தலைவர் நாசர், சங்க பொது செயலாளர் விஷால் பத்திரிகையாளர்களிடம் பேட்டியை கொடுக்கும் போது கூறியதாவது.    

"துணை தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் அவரின் ராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை. இந்த ராஜினாமா கடிதத்தை மறுபரிசீலனை செய்வதற்கு கேட்டிருக்கிறோம். இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. பொன்வண்ணன் நடிகர் சங்கத்தில் இணைந்து மீண்டும் எங்களுடன் பணிபுரிவார் மேலும் சங்கத்தில் இருந்து வேறு சிலர் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள் என்று வருகிற தகவல் வெறும் வந்தியே" என்று கூறியுள்ளார்.      

 

நடிகர் பொன்வண்ணனின் ராஜினாமாவை நிராகரித்த நடிகர் சங்கம்