ads

விஜய் சேதுபதியின் பலவித கெட்-டப் படத்தின் இசை விரைவில்

oru nalla naal paathu solren audio coming soon

oru nalla naal paathu solren audio coming soon

புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பல வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா, காயத்ரி சங்கர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. டீசரில் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஒரு வாசத்திற்கு பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது. மேலும் டீசரில் வெளிவந்த விஜய் சேதுபதியின் பல வித கெட்டப்புகள் ரசிகர்களிடம் வெகுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 7சி என்டர்டைன்மெண்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த சிங்கிள் ட்ராக் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஜனவரியில் வெளிவர உள்ள இப்படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் பரபரப்பாக இறங்கியுள்ளனர். படத்தின் போஸ்டர், டீசர், சிங்கிள் ட்ராக் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசையை விரைவில் வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.      

விஜய் சேதுபதியின் பலவித கெட்-டப் படத்தின் இசை விரைவில்