ads

நடிகர் அக்ஷய் குமாரின் 'பட்மேன்' ட்ரைலர்

padman trailer official

padman trailer official

இயக்குனர் ஆர்.பால்கி எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பி படம் 'பட்மேன்'. இந்த படத்தை ஹோப் ப்ரொடக்சன், கிரிஆர்ஜ் எண்டர்டெயின்மெண்ட், கொலம்பியா பிக்ச்சர்ஸ், மிஸஸ் பன்னிபோன்ஸ் மூவிஸ் சார்பில் அக்ஷய் குமார், டிவிங்கில் கண்ணா, ஆர்.பால்கி, அர்ஜுன் என்.கபூர் உள்ளிட்டோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அமித் த்ரிவேடி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா அப்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் விநியோக உரிமையை சோனி பிக்ச்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெண்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் கோயம்புத்தூரை சேர்ந்த புகழ் பெற்ற அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படம் நிச்சயம் மக்கள் மத்தியில் முக்கியமாக பெண்கள் மத்தியில் முக்கிய இடம் பிடிக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அக்ஷய் குமாரின் 'பட்மேன்' ட்ரைலர்