இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் இணையும் நடிகர் அரவிந் சாமி

       பதிவு : Dec 18, 2017 23:32 IST    
aravind swamy new film with ks ravikumar aravind swamy new film with ks ravikumar

நடிகர் அரவிந் சாமி 'தளபதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து 'ரோஜா', 'இந்திரா', 'பாம்பே' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சிறிது காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்ட அவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு திறமைக்கு சிறந்த வில்லன் விருதை பெற்றார். இவருடைய வில்லன் கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. 

இதனை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வந்தது. இவருடைய நடிப்பில் அடுத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'சதுரங்க வேட்டை 2', 'நரகாசூரன்', 'வணங்காமுடி' போன்ற படங்கள் திரைக்கு வரவுள்ளது. மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 16ம் தேதி அன்று ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டர் மூலம் பதிலளித்து வந்த அரவிந் சாமியிடம் ஒருவர் உங்களுக்கு இயக்குனராகும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டதிற்கு.... ஆமாம், 2018-யில் இயக்குனராகுவேன் என நம்புகிறேன் என்று பதில் டிவிட் பதிவு செய்துள்ளார் 
 

 


இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் இணையும் நடிகர் அரவிந் சாமி


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்