ads

விஜய் யேசுதாஸின் படை வீரன் படத்தினை பாராட்டிய பிரபலம்

actor dhanush appreciated padai veeran movie

actor dhanush appreciated padai veeran movie

புதுமுக இயக்குனர் தானா இயக்கத்தில் நடிகர் மற்றும் பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் நடிப்பில்  நேற்று (2.2.2018) வெளிவந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'படை வீரன்'. இந்த படம் கிராமத்து பாணியில் உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தனுஷின் 'மாரி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஜய் யேசுதாஸ் இப்படத்தின் மூலமா நாயகனாக உருவெடுத்துள்ளார். இந்த படத்தில் விஜய் யேசுதாஸ் ஊரை சுத்தி திரியும் இளைஞனாக வளம் வந்ததினை தொடர்ந்து காவல் துறை அதிகாரியாக உருவெடுத்துள்ளார். இந்த கட்டத்தில் இருந்து படத்தின் விறுவிறுப்பான பல காட்சிகள் துவங்க ஆரமிக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற அய்யனார்பட்டி கிராமத்தை சார்ந்த விஜய் யேசுதாஸ் காவல் துறை அதிகாரியாக வளம் வந்து பக்கத்து கிராமத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை அதிரடியாக சமாளிப்பதே கதையின் மையக்கருத்து.        

மேலும் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, அகில், அம்ரிதா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க, இவர்களுடன் மனோஜ் குமார், கவிதா பாரதி, சிந்து, நிதிஷ், ஜெயசந்திரன் ஆகியோர் பேசத்தக்க கதாபாத்திரத்தில் இணைந்திருந்தனர். இவோக் நிறுவனம் சார்பில் மதிவாணன் தயாரித்திருந்த இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெற்று மக்களிடையே வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தது. இப்பாடலில் இடம் பெற்ற 'லோக்கல் சரக்கா பாரின் சரக்கா' என்ற பாடல்  நடிகர் தனுஷ் பாடியிருந்தார்.   மேலும் படத்தின் நாயகனான விஜய் ஜேசுதாஸ் இரண்டு பாடல்களை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தினை பார்த்த நடிகர் தனுஷ் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதோடு, இப்படத்தை பார்ப்பதற்கு மிஸ் பண்ணிராதீங்க ப்ளீஸ் என்று ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.    

விஜய் யேசுதாஸின் படை வீரன் படத்தினை பாராட்டிய பிரபலம்