நடிகர் ஜெயம் ரவியின் புது பட அறிவிப்பு

       பதிவு : Dec 08, 2017 15:55 IST    
jeyam ravi new movie announcement jeyam ravi new movie announcement

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியுள்ளது. வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். டிசம்பரில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் வரை நடைபெறுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு ஜெயம் ரவி சங்கமித்ரா என்ற பிரமாண்ட படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

 


நடிகர் ஜெயம் ரவியின் புது பட அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்