யுவன் இசையில் பேய் பசிக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

       பதிவு : Mar 01, 2018 11:01 IST    
ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'பேய் பசி' படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி யுவன் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார், Image Credit - Twitter(@diamondbabu4)

இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவி நயம் இயக்கத்தில் தற்போது த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் 'பேய் பசி'. இந்த படத்தில் நாயகனாக ஹரி பிரசாத் பாஸ்கர் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார். இவர்களுடன் விபின், நமீதா, டேனியல், பகவதி பெருமாள், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நடக்கும் திகில் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளதாக யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

இவருடைய இசையில் நடிகர் விஜய் சேதுபதி பாடுவது இதுவே முதன் முறையாகும். ஒரே இடத்தில் நடக்கும் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் இசையமைப்பது பக்க பலமாக இருந்தது. தற்போது இவருடைய இசையில் விஜய் சேதுபதி பாடலை பாடியிருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

இந்த படத்தை ரெஸ்ட் ஈஸ்ட் கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர் மற்றும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவை வெளியாக உள்ளது. 

 


யுவன் இசையில் பேய் பசிக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்