ads

செக்க சிவந்த வானம் படத்தில் அரசியல்வாதி வில்லனாக அரவிந் சாமி

Lead actor Arvind Swamy acting as Politician Villain in Maniratnam

Lead actor Arvind Swamy acting as Politician Villain in Maniratnam's Chekka Chivantha Vaanam movie also Arvind Swamy paired with actress Jothika

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம் 'செக்க சிவந்த வானம்'. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதன் மூலம் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந் சாமி ஆகியோருடன் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளதாக தெரிய வந்தது. இந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிப்பதாக கூறப்பட்டது.

தற்போது அவருக்கு பதிலாக அருண்விஜய் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா போன்ற முன்னணி நட்சத்திரங்களை கொண்டு பிரமாண்டமாக மணிரத்னம் அவர்கள் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தில் ஜிமிக்கி கம்மல் பிரபலம் அப்பாணி சரத் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந் சாமி, அருண் விஜய் ஆகியோர் சகோதரர்களாக நடித்து வருகின்றனர். இதில் நடிகர் சிம்பு இன்ஜினீயராகவும், விஜய் சேதுபதி போலீசாகவும், அருண்விஜய் கோவக்கார இளைஞராகவும், அரவிந் சாமி முழு நேர அரசியல்வாதியாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

தொழிற்சாலைகளில் ஏற்படும் மாசு, கழிவுகள் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அரசியல்வாதியான அரவிந் சாமி தனது செல்வாக்கை பயன்படுத்தி தொழிற்சாலைகள் மூலம் மீத்தேனை எடுக்க முயல்வதும், அதனை சகோதரர்கள் எப்படி தடுக்கின்றனர் என்பதும் படத்தின் மைய கதையாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அரவிந் சாமிக்கு ஜோடியாக ஜோதிகாவும், சிம்புவுக்கு ஜோடியாக 'காற்று வெளியிடை' கதாநாயகி அதிதி ராவும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரபல மாடல் அழகி டயானா எரப்பா என்பவரும் நடிக்க உள்ளனர். இதில் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் 'தர்மதுரை' படத்தில் நடித்திருந்தனர்.

இதில் மாடல் அழகி டயானா எரப்பா, இயக்குனர் மணி ரத்னம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் சார்பில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

செக்க சிவந்த வானம் படத்தில் அரசியல்வாதி வில்லனாக அரவிந் சாமி