ads
நடிகர் விக்ரமின் அடுத்த படத்தினை இயக்கும் தல இயக்குனர்
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 28, 2017 23:42 ISTபொழுதுபோக்கு
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் 'இருமுகன்'. இந்த படத்தினை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்', விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்', ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' போன்ற அதிரடி படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாக்கி வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் விக்ரம் தர லோக்கல் கெட்டப்பில் களமிறங்கியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் அதிரடியில் களமிறங்கிய விக்ரமின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த படியாக ஹரி இயக்கத்தில் போலீஸ் கெட்டப்பை கையாண்டுள்ள விக்ரமின் 'சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது துவங்கியுள்ளது. இந்நிலையில் சீயான் விக்ரம் பில்லா, ஆரம்பம் போன்ற படத்தினை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 'இந்த செய்தி வெறும் வதந்தியே' என்று விக்ரம் தரப்பு மறுத்துள்ளது.