தாதா 87 Single Track வெளியீடு

       பதிவு : Nov 06, 2017 10:45 IST    
தாதா 87  Single Track வெளியீடு

கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததினை தொடர்ந்து மூன்று முகம், விக்ரம், தளபதி, வீரா, ஜெயஹிந்த் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் அந்தோணியின் ஷைத்தானின் நடித்துள்ள இவர் 'தாதா 87' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தாதா (வில்லன்) வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு நடிகை கேத்ரின் தெரசா முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.  

 

விஜய் ஸ்ரீ இயக்கத்தில், கலைச்செல்வன் தயாரிப்பில் எடுத்து வரும் இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை சாருஹாசனுக்காக பாடியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் 9 வருடங்களுக்கு பிறகு காமெடி நடிகர் ஜனகராஜ் இப்படத்தில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.  

படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் இறுதி நிலையை அடைவதாக படக்குழுவினர் கூறினார். இந்நிலையில் படத்தின் Single Track 'ஆறடி ஆண்டவன்' நாளை வெளியிடுவதாக தகவல்கள் வந்துள்ளது. இப்பாடல் கமல்ஹாசன் பாடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.     

 


தாதா 87 Single Track வெளியீடு


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்