கன்னடத்தில் உருவாகி வரும் தனுஷின் பவர் பாண்டி

       பதிவு : Feb 07, 2018 17:31 IST    
dhanush pa paandi kannada remake dhanush pa paandi kannada remake

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் இயக்கத்தில் முதல்  படமாக 'பவர் பாண்டி' படம் கடந்த வருடம் வெளியானது. இந்த படத்தின் நாயகனாக நடிகர் ராஜ்கிரணை நடிக்க வைத்தார். 'ப.பாண்டி' படம் ரசிகர்கள் மற்றும்  வசூல் ரீதியாகவும் ஓரளவு வெற்றியடைந்ததினால் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தனது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள இந்த படத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வட சென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' போன்ற படங்களில் நடித்து வருவதால் தனது அடுத்தப்படத்தை இயக்கும் முடிவை சற்று தள்ளி வைத்துள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் தற்போது 'ப.பாண்டி' படம் கன்னட ரீமேக்காக உருவாகிறது. கன்னடத்தில் உருவாகி வரும் இந்த படத்தை நடிகர் கிச்சா சுதீப் தயாரிக்க உள்ளார்.

 

நான் ஈ, புலி, பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது நடிகர் மோகன்லாலின் 'நீரழி', நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் கூட்டணியில் உருவாகும் 'சயிரா நரசிம்ம ரெட்டி' போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தமிழில் 'ப பாண்டி' படத்தில் ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில் கன்னடத்தில் முன்னணி நடிகராக விளங்கும் அம்பரீஷ் நடிக்க உள்ளார். ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்க உள்ளார். நடிகர் அம்பரீஷின் சிறுவயது கேரக்டரில் நடிகர் கிச்சா சுதீப் இணைந்துள்ளார். சுஹாசினி மணிரத்னத்தின் சிறுவயது கேரக்டரில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிக்கிறார். இந்த படத்தை  குருதத்தா கனிகா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. 

dhanush pa paandi kannada remake dhanush pa paandi kannada remake

கன்னடத்தில் உருவாகி வரும் தனுஷின் பவர் பாண்டி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்