ads

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம்

gautham karthik director muthaiah new movie titled devarattam

gautham karthik director muthaiah new movie titled devarattam

குட்டி புலி, கொம்பன், மருது, கொடி வீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவருடைய இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'கொடி வீரன்'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து இவருடைய புது படம் குறித்த தகவல் வந்துள்ளது. இந்த படத்தை பருத்தி வீரன், சிறுத்தை, சிங்கம், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார்.

இவருடைய தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் முத்தையாவுடன் இணைந்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இவர் நடிப்பில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ளது.

முன்னதாக இவருடைய நடிப்பில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் 'ஹர ஹர மஹாதேவகி' படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக கவுதம் கார்த்திக், ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'தேவராட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம்