நடிகர் சேரனை இயக்கும் மழை பட இயக்குனர்

       பதிவு : Feb 12, 2018 12:27 IST    
director cheran to play the lead in an investigative thriller director cheran to play the lead in an investigative thriller

தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் 'பாரதி கண்ணம்மா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராகவும், திரைப்பட எழுத்தாளராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய 'வெற்றிக் கொடிகட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் மூலம் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. மேலும் 'தேசிய கீதம்' என்ற படத்தின் மூலம் முதல் முறையாக பிலிம் பேர் விருது பெற்றதை தொடந்து 'பாண்டவர் பூமி' படத்திற்கும் பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. நடிகர், இயக்குனர் எழுத்தாளர் போன்ற திறமைகளை தொடந்து இவர் இயக்கி நடித்த 'ஆட்டோகிராப்' படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் வளம் வந்தார்.       

 இவரது எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் இறுதியாக கடந்த 2015ம் ஆண்டில் வெளிவந்த 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தினை தொடர்ந்து சிறிய கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் நாயகனாக நடிக்கவுள்ளார். இவர் நடிக்கவுள்ள இப்படம் புலன் ஆய்வு  த்ரில்லரை மையமாக வைத்து உருவாக்கவுள்ளது. மேலும் இவர் நடிக்கவுள்ள படத்தினை இயக்குனர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'மழை' படத்தினை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தில் சில முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், சுகன்யா போன்றவர்கள் இணைந்துள்ளனர். மிக விரைவில் துவங்கவிருக்கும் இப்படத்தின் டைட்டில், படப்பிடிப்பு தேதி, கலைக்கஞர்கள் பற்றிய தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் இணையவுள்ள நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.       

 

 


நடிகர் சேரனை இயக்கும் மழை பட இயக்குனர்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்