ads

இயக்குனர் ராஜமௌலி இயக்கும் புது படத்தில் நடிகர் ஆமிர் கான் கதாபாத்திரம்

ss rajamouli mahabharata movie updates

ss rajamouli mahabharata movie updates

தெலுங்கின் பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலியின் ஒவ்வொரு படங்களும் அவருக்கு மாபெரும் வெற்றி படங்களாகவே அமைந்தன. இவருடைய முதல் படமான 'ஸ்டூடன்ட் நம்பர் 1' என்ற படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த படம் ஜூனியர் என்டிஆருக்கு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. தமிழில் இந்த படத்தை அதே பெயரில் வெளியிட்டனர். இதன் மூலம் தமிழில் நடிகர் சிபிராஜ் அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 'சிம்மாத்திரி' என்ற படம் வெளியானது. இந்த படத்தை தமிழில் 'கஜேந்திரா' என்று வெளியிடப்பட்டது. 

அடுத்ததாக 'விக்கிரமகுடு' என்ற படத்தை தமிழில் 'சிறுத்தை' என்ற தலைப்பில் படமாக்கப்பட்டது. 'மகதீரா' என்ற படத்தை தமிழில் 'மாவீரன்' என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இவருடைய 'நான் ஈ' என்ற படம் நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய படங்கள் இவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி உலகெங்கும் வசூல் சாதனை படைத்தது. இவர் தற்போது நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இரு நாயகர்களை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். 'பாகுபலி' முதல் பாகத்தை எடுக்கும் போது இயக்குனர் ராஜமௌலி, ஆமிர் கானை சந்தித்தார். 

அப்போது மகாபாரதம் படத்தை இயக்குவது பற்றி பேசியுள்ளனர். நடிகர் ஆமிர் கான் தற்போது 'தக்ஸ் ஆப் இந்துஸ்தான்' என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் இரு கதாநாயகர்கள் கொண்ட படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு மாகாபாரதம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் ராஜமௌலியின் அனைத்து படங்களிலும் இசை பணிகளை எம்எம் கீரவேணியும், படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வராவும் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆமிர் கான் இந்த படத்தில் கிருஷ்ணர் வேஷம் போடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும்  இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், பிரபாஸ்,அமிதாப் பச்சன், பார்ஹான் அக்தர், அஜய் தேவ்கன், ரித்திக் ரோஷன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல பிரபலங்கள் இணையவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிறது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கும் புது படத்தில் நடிகர் ஆமிர் கான் கதாபாத்திரம்

இயக்குனர் ராஜமௌலி இயக்கும் புது படத்தில் நடிகர் ஆமிர் கான் கதாபாத்திரம்