ads

இயக்குனர் மணிரத்னம் மல்ட்டி ஸ்டார் படத்தில் இருந்து விலகிய பிரபலம்

fahadh faasil out of maniratnam new film

fahadh faasil out of maniratnam new film

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை கொண்ட இயக்குனர் மணிரத்னம் பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் இவருடைய படங்கள் என்றாலே சுருக்கமான வசனத்திற்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. தற்பொழுது பல திரையுலக நட்சத்திரங்களை கொண்டு ஒரு புது படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. மேலும் இப்படத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி, சிலம்பரசன், பிரகாஷ் ராஜ், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அதிதி ராவ் ஷைதாரி உள்பட பல நட்சத்திரங்கள் அதிரடியாக களமிறங்கியுள்ளது.    

இந்நிலையில் படத்தில் இணைந்திருந்த மலையாள முன்னணி நடிகர் ஃபஹத் ஃபாசில் படத்தில் இருந்து விலகியதாக தகவல் வந்துள்ளது. இதன் அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழ் திரையுலகில் 'வேலைக்காரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பை கையாண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். தற்பொழுது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.    

இயக்குனர் மணிரத்னம் படங்கள் என்றாலே திரையுகில் தனி எதிர்பார்ப்பு நிலவி வரும். இந்நிலையில் பல முன்னணி நடிகர் - நடிகைகளை ஒன்றிணைத்து இயக்கவுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்து வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் சில கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதில் கடந்த 1999ம் ஆண்டில் 14 இயக்குனர்கள் இணைந்து இயக்கப்பட்ட காமெடி படமான 'சுயம்வரம்' படத்தினை போன்று இருக்கலாம் என கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். திரைகடல் ஒன்றிணைந்து காதல் கலந்த காமெடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.   

இயக்குனர் மணிரத்னம் மல்ட்டி ஸ்டார் படத்தில் இருந்து விலகிய பிரபலம்