கஜினிகாந்த் படத்திற்கு குட் பை சொன்ன சாயீஷா

       பதிவு : Jan 22, 2018 12:16 IST    
ghajinikanth shooting wrap up with sayesha ghajinikanth shooting wrap up with sayesha


கௌதம் கார்த்திக், நிக்கிகல்ரானி நடிப்பில் வெளிவந்த அடல்ட் காமெடி படமான 'ஹர ஹர மகாதேவகி' படத்தின் மூலம் இயக்குனராக சந்தோஷ்.பி.ஜெயக்குமார் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்திலும் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி போன்ற மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். இதில் வைபவி சாண்டில்யா சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் காமெடி நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிட தக்கது.

இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஜெயக்குமார் 'கஜினிகாந்த்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயீஷா இணைந்துள்ளார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் ஜூங்கா படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிட தக்கது. காமெடியை மையமாக வைத்து உருவாகி வரும் 'கஜினிகாந்த்' படத்தினை 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா பிறந்த நாளன்று நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து டீசர் மற்றும் பார் என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கில் டிராக் வெளியானது. இவற்றிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு படத்தின் மீதான  எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பில் நாயகி சாயீஷாவின் அனைத்து காட்சிகளும் நிறைவடைந்து விட்டதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

 


கஜினிகாந்த் படத்திற்கு குட் பை சொன்ன சாயீஷா


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்