விஜய் சேதுபதி வெளியிட்ட கோலி சோடா 2 ட்ரைலர்

       பதிவு : Feb 12, 2018 15:32 IST    
goli soda 2 trailer release from february 14th goli soda 2 trailer release from february 14th

தமிழ் திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், படத்தில் ஒளிப்பதிவு பணியில் மட்டும் ஈடுபடாமல் சில படங்களை இயக்கி இயக்குனராகும் வளம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இவரது இயக்கத்தில் வெளிவந்த 'கோலி சோடா' படத்திற்கு மக்களிடையே வெகுவான வரவேற்பு கிடைத்ததின் மூலம் தற்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.   

இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கௌதம் மேனன் காவல் துறை அதிகாரியாக வளம் வருகிறார். கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்து தற்பொழுது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தில் அவருக்கு சொந்தமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தினையும் தயாரித்துள்ளார்.

 

படக்குழு சமீபத்தில் வெளியிட்ட ஆடியோ ரிலீஸ், போஸ்டர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.  இந்நிலையில் படத்தின் ட்ரைலரை காதலர் தினத்தினை முன்னிட்டு வருகிற பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் அச்சு இசையமைக்க, தீபக் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டு வரும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ‘கிளாப் போர்டு புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த அதிகார பூர்வ அறிவிப்பை இயக்குனர் விஜய் மில்டன் அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  


விஜய் சேதுபதி வெளியிட்ட கோலி சோடா 2 ட்ரைலர்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்