ads

புத்தாண்டிற்கு விருந்தளிக்கும் கோலிசோடா படக்குழு

golisoda 2 movie first look

golisoda 2 movie first look

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்து தற்பொழுது உருவாகிவரும் படம் 'கோலிசோடா 2'. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் 'பிரியமுடன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு காதல், தீபாவளி, காதலில் விழுந்தேன், வழக்கு எண் : 18/9, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது 'கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார். இந்த படம் கூடைப்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகியுள்ளது. மேலும் விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் அவருக்கு சொந்தமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தினையும் தயாரித்துள்ளார். காவல் துறை அதிகாரியாக இயக்குனர் கெளதம் மேனன் களமிறங்கியுள்ள இப்படத்தில் அச்சு இசையமைக்க, தீபக் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.  

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட்டது. அது   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக படக்குழு தகவலை வெளியிட்டிருக்கும் நிலையில் படத்தின் அதிகார பூர்வ செய்தியை இன்று வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் கார்த்திக் முன்னிலையில் வெளியிடவுள்ளனர்.  

புத்தாண்டிற்கு விருந்தளிக்கும் கோலிசோடா படக்குழு