இயக்குனர் கோபி நயினாருடன் இணைந்த ஜிவி பிரகாஷ்

       பதிவு : Feb 21, 2018 14:14 IST    
Actor GV Prakash Kumar playing lead role in Aramm director Gopi Nainar directional Actor GV Prakash Kumar playing lead role in Aramm director Gopi Nainar directional

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி அறம் படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கவே திரையுலகிற்கு வந்துள்ளதாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமூக கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்க பட்ட இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து 'அறம்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் முடிவு செய்து சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது.

 

இரண்டாம் பாகத்தில் 'நயன்தாரா' அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளார். மேலும் இயக்குனர் கோபி நயினார், நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் புது படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதனை அடுத்து தற்போது தனது அடுத்த படத்திற்கு நடிகர் ஜிவி பிரகாசுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த பேச்சு வார்த்தை ஜிவி பிரகாஷிடம் நடந்து வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் சமூக கருத்தை அடிப்படையாக கொண்டு இயக்க உள்ளாராம். தற்போது இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதுப்படத்தை இயக்கவுள்ளார்.

 

Director Gopi Nainar new movie with Actor GV Prakash kumarDirector Gopi Nainar new movie with Actor GV Prakash kumar

இயக்குனர் கோபி நயினாருடன் இணைந்த ஜிவி பிரகாஷ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்