ads

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த பட பூஜை

adhi new movie poojai

adhi new movie poojai

'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நாயகனாக 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்திருந்தது. இதனை அடுத்து ஆதியின் அடுத்த படமும் இயக்குனர் சுந்தர் சி  அவரது அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

மீண்டும் 'மீசைய முறுக்கு' கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஆதி  ஹாக்கி வீரனாக நடிக்க  உள்ளார். இந்த படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடந்ததாக ஆதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்த பூஜையில் ஆதி, நடிகர் பாண்டியராஜன், விஜய் விருஷ், பென்னி ஆலிவர், கவுசிக் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. விரைவில் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த பட பூஜை