ads

இரும்பு திரையின் புது வித போஸ்டர்

irumbu thirai movie poster

irumbu thirai movie poster

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலளர் மற்றும் நடிகருமான விஷால் இரும்பு திரை, சண்டகோழி 2 போன்ற படங்களில் நடித்து வருவதில் பிசியாக இருக்கிறார். விஷாலுக்கு சொந்தமா VVF தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்  'இரும்பு திரை' படத்தினை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தினை பிஎஸ்.மித்ரன் இயக்குகிறார். இந்த படத்தில் சமந்தா, அர்ஜுன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  

அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளிவரவிருப்பதால் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக எடுத்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் அதிக  படுத்துவதற்காக படத்தின் போஸ்டர்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு விதமாக படக்குழு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து  நேற்று விஷாலின் புதுவிதமான போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரை பார்க்கும் போது விஷால் அதிரடியில் இறக்கியிருப்பதாக தெரிகிறது.  

irumbu thirai movie third lookirumbu thirai movie third look

இரும்பு திரையின் புது வித போஸ்டர்