ads
பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறிய விஷாலின் 'இரும்பு திரை'
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 13, 2017 20:39 ISTபொழுதுபோக்கு
பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து நடித்து வரும் 'இரும்பு திரை' படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட உள்ளனர். 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளிவர உள்ள இப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் போன்றவர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாகவே வெளியிட்ட நிலையில் படக்குழு ஒரு புது போஸ்டரை நேற்று வெளியிட்டுள்ளது.
படத்தினை பொங்கலுக்கு வெளியிட இருப்பதால் மழைக்காலத்திலும் டென்ட் போட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த இப்படத்தினை ஜனவரி மாதம் 26ம் தேதி இரு திரையுலகிலும் வெளியிடுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.